பக்கிங்ஹாம் அரண்மனைக்கு உண்மையான வாரிசு நான் தான்: ஆதாரத்தை வெளியிட்ட நபர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
436Shares

பிரித்தானியாவின் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு தங்கள் மூதாதையர்களே உண்மையான வாரிசு என கூறி நபர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

குறித்த விவகாரம் தொடர்பில் 73 வயதான ஃபிராங்கோயிஸ் கிராஃப்டியோக்ஸ் என்பவர் மரபணு சோதனைக்காக பிரித்தானிய ராணியாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் இருமுறையும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமது பாட்டியுடன் பிரித்தானிய மன்னர் 8-வது எட்வர்ட் உறவுமுறையில் இருந்ததாகவும்,

1900 ஆம் ஆண்டு காலகட்டத்திற்கு பின்னர் சட்டவிரோத முயற்சியால் தங்களது ரத்த உறவு துண்டிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது பாட்டியாருக்கும் அப்போது வேல்ஸ் இளவரசர் என அறியப்பட்ட மன்னர் 8-வது எட்வர்ட்கும் இடையே பிறந்தவர் தான் தமது தந்தை Pierre-Edouard என தெரிவித்துள்ள ஃபிராங்கோயிஸ்,

(Image: SWNS)

பிரித்தானிய அரசியல் சூழலாலும் அரச குடும்பத்தால் ஏற்பட்ட அழுத்தங்களாலும் மன்னர் 8-வது எட்வர்ட் தமது பதவியை வலுக்கட்டாயமாக துறந்துள்ளதாலையே, குறித்த பதவிக்கு தங்களால் வரமுடியாமல் போனது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அவரது குடும்பம் நிலம், பட்டங்கள் மற்றும் செல்வத்தை இழந்ததுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் நீதிமன்றத்தை நாடுவது மூலம் மறுக்கப்பட்ட செல்வாக்கை பெற முடியும் என தாம் நம்புவதாக ஃபிராங்கோயிஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மன்னர் எட்வர்ட் முகச்சாயலில் இருக்கும் ஃபிராங்கோயிஸ், மறைந்த தமது தாத்தாவுக்கு இழப்பீடு கேட்பதில் எந்த ஆர்வமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

(Image: SWNS)
(Image: SWNS)
(Image: SWNS)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்