எலும்புகள் உடையும் அளவிற்கு புதுமணத்தம்பதியை கோடாரியால் தாக்கிய மர்ம கும்பல்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் புதுமணத்தம்பதியை கொடூரமாக தாக்கிய வழக்கில் ஒருவரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த தெரசா எம்சிவர் மற்றும் அவரது கணவர் நீல் ஆகியோர் தங்களுடைய திருமணம் முடிந்த 6 மாதத்திலே மர்ம நபர்களால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

கடந்த மே மாதம் கையில் ஆயுதங்களுடன் தம்பதியினரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 12 பேர், சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் தெரசாவுக்கு விலா எலும்புகள் உடைந்து, முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. அவருடைய கணவருக்கு தலையில் 32 தையல்களும், கையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது.

நீண்ட நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் இருவரும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால் அப்போது தான் தெரசாவின், நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவம் நடைபெறுவதற்கு முன்தினம் மாலை தம்பதியினர் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர்கள் தான் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மூன்று பேரை கைது செய்தனர். அவர்களில் இரண்டு பேர் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், 27 வயதுடைய இளைஞர் மட்டும் எதிர்வரும் திங்கட்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்