60 வருட காதல் வாழ்க்கை... விபரீத முடிவெடுத்த பிரித்தானிய மூதாட்டி: இறுதியில்!

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த வயதான தம்பதி மரணத்திலும் தாங்கள் பிரியக் கூடாது என எண்ணி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவின் ஸ்டாஃபோர்ட்ஷயர் பகுதியில் குடியிருக்கும் டென்னிஸ் எக்லெஸ்டன் - மாவிஸ் தம்பதிக்கு 1958 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தைகள், பேரன்கள் என அழகாக நகர்ந்துகொண்டிருந்த வாழ்க்கையில் புற்றுநோய் அழையா விருந்தாளியாக வந்தது.

கணவர் படும் துயரை இவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.

இருவரும் விஷத்தை அருந்தியுள்ளனர். தன் கணவருக்கு விஷத்தைக் கொடுத்த மாவிஸ் இறுதியாக , ``குட் நைட் டார்லிங்'' எனக் கூறி அவருக்கு போர்வையைப் போர்த்தியுள்ளார்.

விஷத்தின் தன்மை காரணமாக மாவிஸ் மயக்கமடைந்தார். யாரோ அவரை எழுப்புவதுபோல் இருந்தது. இந்த இரவு இனி விடியப்போவதில்லை என நினைத்திருந்த மாவிஸின் கண்கள் விழித்தது.

தன்னுடைய தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்ததை உணர்ந்தார். மருத்துவமனையில் மாவிஸ் மற்றும் அவரின் கணவர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

டென்னிஸ் தீவிர சிகிச்சையில் இருந்தார். டென்னிஸுக்கு எதிரில் மாவிஸ் படுத்திருந்தார். மரணப்படுக்கையில் இருந்த தாய், தந்தை இருவரையும் அவரின் குழந்தைகள் புகைப்படம் எடுத்தனர்.

தன் கணவர் கைகளை டென்னிஸ் மெல்ல கைப்பற்றினார். புற்றுநோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்த டென்னிஸ் விஷத்தின் தாக்கத்தினால் மரணமடைந்திருந்தார்.

இது குறித்த தகவல் காவல்நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின்னர் 80 வயதான மாவிஸ் கைது செய்யப்பட்டார்.

30 மணி நேரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதியாக இருந்த மாவிஸ் பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

காவல்துறையினரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், நான் என் கணவருடன் இருக்க விரும்பினேன். அவரின் துயரத்தை நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். விலங்குகள்கூட அதுபோன்ற வலிகளுடன் இருக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள். நான் செய்ததற்கு வருத்தப்பட வேண்டாம், என்ன நடந்தது என்பதை மாற்ற மாட்டேன் என்றார்.

நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்தாண்டு செப்டம்பரில் மாவிஸ் விடுதலையானார்.

டென்னிஸ் எக்லெஸ்டன் - மாவிஸ் இருவரும் மருத்துவமனையில் இறுதியாக இணைந்திருந்த புகைப்படத்தை அவரின் மகள் ஜாய் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ஜாய், என்னுடைய 80 வயது தாய் ஒரு கொலைகாரரைப்போல் இருக்கிறாரா? என் தாய், தந்தை இருவரும் ஒன்றாக இருந்த அந்தப் புகைப்படத்தை உங்கள் பார்வைக்கு அளிக்கின்றேன்.

இது வெளியிடுவதற்கான காரணம், தங்கள் அன்புக்குரியவர்கள் கஷ்டப்படும்போது என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை பெறுவதற்காகவே இதை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.

மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் தந்தையுடன் தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

என் தந்தை வலியால் துடிப்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 60 வருட காதல் வாழ்க்கையில் அவருக்காக நிறைய விஷயங்களைத் தியாகம் செய்தார்.

இறுதியாக தன் உயிரையும் தியாகம் செய்ய முடிவு செய்தார். நான் அந்த புகைப்படத்தை எடுத்த 20 நிமிடத்தில் என் தந்தை மரணமடைந்துவிட்டார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதைப் பகிர்ந்தோம்.

இது சட்டத்தை மாற்ற எங்களுக்கு உதவுமானால் அது மதிப்புக்குரியதாக இருக்கும் என்றார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers