மகனை பறிகொடுத்த இந்திய வம்சாவளி பெண்: பிரித்தானிய அரசுக்கு கண்ணீர் கோரிக்கை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நெடுஞ்சாலை விபத்தொன்றில் மகனை அநியாயமாக பலி கொடுத்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர், ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலைகளுக்கு தடைவிதிக்குமாறு பிரித்தானிய அரசுக்கு கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென பழுதாகி நின்றபோது, வேகமாக வந்த ட்ரக் மோதி அந்த காரிலிருந்த தேவ் நரன் (8) என்னும் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.

இந்திய வம்சாவளி தம்பதியரான மீரா, திலேஷ் நரன் தம்பதியரின் மகன் தேவ் நரன் (8).

தேவ் தனது தாத்தாவுடன் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென அவர்கள் சென்ற கார் பழுதாக, நெடுஞ்சாலையில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு காரை கொண்டு செல்ல அவர் முயற்சிக்கும்போது, வேகமாக வந்த ட்ரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான் தேவ்.

அவர்கள் பயணித்தது ஒரு ஸ்மார்ட் சாலை. அதாவது, அதில் ஒரு வழிச்சாலை, கூட்ட நெரிசலுக்கேற்றாற்போல் பயன்பாட்டுக்கு விடப்படும்.

மற்றபடி, அவசர காலத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு அந்த சாலையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அப்படி நிறுத்தும்போதுதான் தேவ் உயிரிழந்துள்ளான். இப்படி ஒரு உயிரிழப்பு நேரிடுவது, அதுவும் பர்மிங்காம் நெடுஞ்சாலையில் இது முதல் முறையல்ல.

ஏற்கனவே அகமது (36) என்பவர், Jason Mercer (44) என்பவர், Derek Jacobs (83) ஆகியோர் இதே போன்ற ஸ்மார்ட் சாலையில் கொல்லப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து உருவாக்கியுள்ள Broken Hearts Club என்ற வாட்ஸ் ஆப் குழுவின் உறுப்பினர்கள் இந்த ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலைகளுக்கு தடைவிதிக்குமாறு பிரித்தானிய அரசுக்கு கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...