தனிமையாக்கப்பட்ட இளவரசர் ஹரி, மேகன் மற்றும் குழந்தை ஆர்ச்சி! மனதை உருக்கும் குடும்ப மரத்தின் புகைப்படம்

Report Print Raju Raju in பிரித்தானியா
1280Shares

அரச பொறுப்புகளில் இருந்து பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவர் மனைவி மேகன் ஆகியோர் விலக முடிவெடுத்துள்ள நிலையில் அதை விளக்கும் மனதை உருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவர் மனைவி மேகனும் அரசு பொறுப்புகளில் இருந்து விலக முடிவு செய்தனர்.

பொதுமக்கள் வரிப்பணத்தில் வாழ விரும்பாத அவர்கள் சுயாதீனமான முறையில் வாழ முடிவெடுத்துள்ளனர்.

தம்பதியின் இந்த முடிவுக்கு பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில் அரச குடும்பத்தில் அடுத்தடுத்து இருக்கும் வாரிசுகள் அடங்கிய குடும்ப மரம் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் எலிசபெத் ராணி மற்றும் பிலிப்புக்கு அடுத்து டயானா, சார்லஸ் மற்றும் கமீலா புகைப்படங்கள் உள்ளது.

அதற்கு கீழே வில்லியம், கேட் புகைப்படங்களும் அதற்கடுத்து அவர்களின் மூன்று குழந்தைகளான குட்டி இளவரசர் ஜார்ஜ், குட்டி இளவரசி சர்லோட் மற்றும் குட்டி இளவரசர் லூயிஸ் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அரச பொறுப்புகளில் இருந்து இளவரசர் ஹரியும், மேகனும் வெளியேற முடிவு செய்த காரணத்தால் அவர்களின் புகைப்படங்களும் தம்பதியின் மகன் ஆர்ச்சி ஹாரிசன் புகைப்படமும் வலது பக்கத்தில் தனியாக இடம்பிடித்துள்ளது.

அதாவது அரச பொறுப்புகளில் இருந்து அவர்கள் விலகுவதை காட்டும் வகையில் அரச குடும்ப வரிசையில் இல்லாமல் தனியாக வெளிப்பக்கம் மூவரும் இருப்பது போல இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்