இறுதிச்சடங்கின் போது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல்! யாருடன் தெரியுமா? திருமணத்தில் முடிந்த சுவாரசியம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் சகோதரரின் இறுதிச்சடங்கின் போது அங்கிருந்த அமைப்பாளருடன் காதல் வயப்பட்ட பெண் அவரையே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அன் கோர்வர் என்ற 41 வயது பெண்ணின் சகோதரர் 4 வருடங்களுக்கு முன்னர் அதிகளவு போதை மருந்துகள் உட்கொண்டதால் உயிரிழந்தார்.

தம்பி மீது அதிகளவு பாசம் வைத்திருந்த அன்-னுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து அவரின் இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்தார் அன்.

இறுதிச்சடங்கு நடந்த இடத்தின் அமைப்பாளர் லீ, அன்-னுக்கு பல்வேறு உதவிகளை செய்தார்.

சகோதரரின் இறப்பால் உடைந்து போயிருந்த அவருக்கு லீ ஆறுதலாகவும் இருந்தார்.

Sunday Mirror

அவரின் மனித்தன்மையை பார்த்து அன்-னின் மனக்கவலை குறைந்தது. அந்த இடத்திலேயே ஒருவருக்கு ஒருவர் மீது ஈர்ப்பு இருப்பது தெரிந்தது.

ஆனால் அங்கு அதை இருவரும் காட்டி கொள்ளவில்லை. பின்னர் அன் மற்றும் லீ ஆகியோர் நெருங்கிய நண்பர்களாகி காதலர்கள் ஆனார்கள்.

ஏற்கனவே இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருந்த போது அதை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து அன் கூறுகையில், லீ மிகவும் மென்மையானவர், அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.

என் சகோதரரை இழந்து நான் நிற்கும் போது எனக்கு மிக பெரியளவில் ஆதரவாக இருந்து உதவிகளை அவர் செய்தார்.

என் சகோதரரின் அஸ்தியை எனது திருமணத்தின் போது அருகில் வைத்து கொண்டேன்.

ஏனெனில் அவன் தான் நாங்கள் இணைவதற்கு காரணம் என கூறியுள்ளார்.

MEDAVIA

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்