லண்டனில் தீவிரவாத தாக்குதல்..! தெறித்து ஓடிய மக்களுக்கு மத்தியில் பெண் செய்த செயல்: திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா தலைநகர் லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து கடைகள் மற்றும் உணவகங்களை உடனடியாக மூட வலியுறுத்திய பொலிசாரிடம், உணவக ஊழியர் 30 நிமிடங்கள் காத்திருக்க முடியுமா என முட்டாள தனமாக கேட்டது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள ஸ்ட்ரீதம் தெருவில் மர்ம நபர் இரண்டு பேரை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் தாக்குதல்தாரியை சுட்டுக்கொன்றுள்ளனர். மேலும், கொல்லப்பட்டவர் 19 வயதான சுதேஷ் அம்மான என்றும், அவர் முன்னதாக பயங்கரவாதி தாக்குதலில் ஈடுபட்டவர் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சுதேஷ் அம்மான் சட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்த கடைகள் மற்றும் உணவகங்களை மூடுமாறு பொலிசார் வலியுறுத்தினர்.

இதன்போது, அத்தெருவில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் நுழைந்து பொலிஸார், இந்த தெருவில் பயங்கரவாதி சுடப்பட்டுள்ளார், உடனே வாடிக்கையாளர்களை வெளியேற்றி உணவகத்தை மூடுங்கள் என வலியுறத்தினார்.

இதற்கு பதிலளித்த உணவகத்தின் பெண் ஊழியர், வாடிக்கையாளர்கள் சாப்பிட வேண்டும், 30 நிமிடங்கள் காத்திருக்க முடியுமா என பொலிசாரிடம் அனுமதி கேட்டுள்ளார்.

இச்சமபவத்தை உணவகத்திலிருந்து ஒருவர் படமெடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.வீடியோவை கண்ட நெட்டிசன்கள், 30 நிமிடங்கள் அனுமதி கேட்ட உணவக ஊழியரை சரிமாரியாக தீட்டி தீர்த்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்