லண்டன் தீவிரவாதியால் கத்தியால் குத்தப்பட்ட பெண்: முதன்முறையாக புகைப்படம் வெளியானது!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனில் தீவிரவாதி ஒருவனால் கத்தியால் குத்தப்பட்ட பெண்ணின் புகைப்படம் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

லண்டனிலுள்ள Streatham பகுதியில் சுதேஷ் அம்மான் என்னும் தீவிரவாதி மூன்று பேரை கத்தியால் தாக்கியதையடுத்து பொலிசார் அவனை சுட்டுக்கொன்றனர்.

அவனால் தாக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணின் புகைப்படம் தற்போது முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

தனது 50 வயதுகளிலிருக்கும் Monika Luftner, ஞாயிறன்று, சுமார் 2 மணியளவில், அவன் என்னை கத்தியால் குத்திவிட்டான் என்று அலறியபடியே ஓடிவந்துள்ளார்.

அவர் Balhamஇலுள்ள St Bede’s Catholic Infant & Nursery பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவராவார்.

Streathamக்கு பயணித்து, தனது 12 வயது மகளை அவளுடைய தோழிகளுடன் அனுப்பிவிட்டு வரும்போதுதான் அம்மான் அவரை கத்தியால் குத்தியுள்ளான்.

மகளை விட்டு விட்டு சைக்கிளில் வீடு திரும்ப முயலும்போது அம்மான் Monikaவை முதுகில் குத்தியுள்ளான்.

Monika Luftner : credit- facebook
மொத்தத்தில் அம்மானால் குத்தப்பட்டவர்கள் மூன்று பேர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் Monika சிகிச்சைக்குப்பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டாராம்.

தனது 40 வயதுகளிலிருக்கும் ஒரு ஆண், முதலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கருதப்பட்டவர், சிகிச்சைக்குப்பிறகு உடல் நலம் சீரடைந்து, தற்போது நலமாக இருப்பதாக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 20 வயதுகளிலிருக்கும் ஒரு பெண்ணும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் அம்மான் மீது துப்பக்கிச்சூடு நடத்தியபோது, சிதறிய கண்ணாடித்துண்டுகளால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்