கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ள கர்ப்பிணி நர்ஸ்: கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்ததற்கு கிடைத்த பலன்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ள பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்த ஒரு கர்ப்பிணி உட்பட நர்ஸ்கள் இருவர் கட்டாயத்தின்பேரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில், கொரோனா நோயாளி ஒருவர் தன்னை அடைத்து வைத்தால் தப்பிவிடுவதாக மிரட்டியதையடுத்து, பிரித்தானியாவில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

அதன்படி, கொரோனா நோய்த்தொற்று உடையவர்களை கட்டாயப்படுத்தி அடைத்துவைக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பெண் ஒருவருக்கு சிகிச்சையளித்த இரண்டு நர்ஸ்கள், அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்த பெண் அடைத்துவைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகிலுள்ள மற்றொரு அறையிலேயே அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.

ஹொங்ஹொங்கிலிருந்து திரும்பிய அந்த பெண்ணுக்கு Hove என்ற இடத்தில் அமைந்துள்ள Mill View hospital என்ற மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளித்த நர்ஸ்கள் இருவரும் நேற்று முன் தினம் இரவு மணி 8.30-லிருந்து தனியறையில் அடைத்து வைக்கப்படுள்ளார்கள்.

கட்டாயத்தின் பேரில் அடைத்துவைக்கப்படும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபின்,நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளித்த நர்ஸ்களே அந்த விதியின் கீழ் முதலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கர்ப்பிணி என்னும் விடயம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் பின் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து தகவல் தெரிவிக்க மருத்துவமனை வட்டாரம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers