லண்டனில் கொரோனா வைரஸ் என ஆசிய இளைஞரிடம் கத்தி அவர் மூக்கை உடைத்த மர்ம நபர்கள்! திருடியதும் அம்பலம்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் கிழக்கு ஆசியாவை சேர்ந்த நபரின் அருகில் வந்து கொரோனா வைரஸ் என கத்திய இருவர் அவரை அடித்து மூக்கை உடைத்ததோடு திருட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.

தெற்கு லண்டனில் உள்ள Fulham சாலையில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய ஆசியரான Pawat Silawattakun (24) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை இருவர் அடித்து உதைத்தோடு, காதில் இருந்த ஹெட்போனையும் திருடியுள்ளனர்.

இது குறித்து Pawat கூறுகையில், என்னை நோக்கி வந்த இருவர் முகத்தின் அருகிலிருந்து கொரோனா வைரஸ் என கத்தினார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள் என நான் கேட்கும் முன்னர் அதில் ஒருவன் என் கழுத்தில் மாட்டியிருந்த ஹெட்போனை பறித்தான்.

Andy Hall/The Observer

பின்னர் என்னை இருவரும் அடித்ததில் மூக்கு உடைந்து அந்த இடம் முழுவதும் இரத்தம் ஆனது. நான் உதவி கோரி கத்திய போதும் யாரும் எனக்கு உடனடியாக உதவவில்லை.

நல்லவேளையாக இருவர் என்னை உபர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் என கூறியுள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், மர்ம நபர்கள் 24 வயது இளைஞர் மீது இனவெறி ரீதியான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் மூக்கு உடைந்து பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடக்கும் நிலையில் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என கூறியுள்ளனர்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்