வீட்டுக்கு வந்து உறவுக்கு அழைத்த அந்நியர்கள்... காரணம் அறிந்து அதிர்ச்சியில் உறைந்த பிரித்தானிய தாயார்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் தனது நிர்வாணத்தை ரகசியமாக படம்பிடித்து, அந்த காட்சிகளை ஆபாச தளங்களில் வெளியிட்ட காதலனால் தாயார் ஒருவர் கடும் சிக்கலில் தள்ளப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமது காதலனின் குறித்த செயலால் நூற்றுக்கணக்கான அந்நியர்கள் வீட்டிற்கு வந்து உறவுக்கு அழைத்ததாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பர்மிங்காம் பகுதியில் குடியிருக்கும் 40 வயதான ஷரோன் தாம்சனுக்கு ஏன் தமது முன்னாள் காதலர் இவ்வாறு நடந்து கொண்டார் என இதுவரை பிடிபடவில்லை என தெரிவித்துள்ளார்.

ஷரோன் தாம்சனின் 49 வயது காதலர் டேரன் ரோவ் தமது குடியிருப்புக்குள் பல ரகசிய கெமராக்களை பொருத்தி வைத்திருந்துள்ளார்.

ஷரோன் தாம்சன் கர்ப்பமாக இருந்த காலகட்டத்திலும் இது தொடர்ந்துள்ளது. ஒருமுறை அந்நியர் ஒருவர் குடியிருப்புக்கு வந்து ஷாரோனிடன் உறவுக்கு தயாரா என கேட்ட சம்பவம் இருவருக்கும் இடையே கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஆபாச தளங்களில் விளம்பரம் செய்திருந்த ரோவ் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

(Image: HotSpot Media)

அக்டோபர் 2019 இல், ரோவ், தனிப்பட்ட பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் தண்டனையும் பெற்றார்.

நான் ஒரு இனிமையான உறவில் இருப்பதாக நினைத்தேன், ஆனால் உண்மையில் ஒரு வக்கிர குணத்துடன் கூடிய ஒருவருடன் வாழ்ந்து கொண்டிருந்தேன் என்பதை நினைத்தாலே நடுங்குகிறது என முதன் முறையாக ஷாரோன் மனம் திறந்துள்ளார்.

ரோவ் ஏன் அதைச் செய்தார் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை என கூறும் ஷாரோன், அவரைப் போன்ற நபர்கள் கண்டிப்பாக சிறையில் இருக்க வேண்டியவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான ஷாரோன் கடந்த 2015 டிசம்பரில் ரோவை தமது இரு பிள்ளைகளுக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

(Image: HotSpot Media)

இதனையடுத்து ஒரு மாதம் கடந்த நிலையில் ஷாரோன் மற்றும் பிள்ளைகளுடன் ஒன்றாக வாழ முடிவெடுத்துள்ளார் ரோவ்.

இந்த நிலையில் தாம் கர்ப்பிணியானதாகவும் ஒரு பெண் பிள்ளைக்கு தாயானதாகவும் ஷாரோன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தாம் 8 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது ஒருமுறை, அந்நியர் ஒருவர் கதவை தட்டியதாகவும், பிள்ளை பெற்று 2 மாதங்களுக்கு பிறகு சுமார் 15 பேர் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

(Image: HotSpot Media)

இதன் காரணம் என்ன என்று ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரித்த போதுதான், ஆபாச தளம் ஒன்றில் புகைப்படம் மற்றும் தொலைபேசி இலக்கத்துடன் விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த தகவல் தம்மை நொறுக்கியதாக கூறும் ஷாரோன், உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

பொலிசாரின் ரகசிய விசாரணையில் டேரன் ரோவ்வின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது என்கிறார் தற்போது மூன்று பிள்ளைகளின் தாயாரான ஷாரோன்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்