குப்பை போட பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை அணிந்துகொண்ட நர்ஸ்கள்: பிரபல பிரித்தானிய மருத்துவமனையின் பரிதாப நிலை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரபல மருத்துவமனை ஒன்றில், மருத்துவக் கழிவுகளை போட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களை அணிந்துகொண்டிருக்கும் நர்ஸ்களின் படம் ஒன்று வெளியாகி அதிரவைத்துள்ளது.

லண்டனில் உள்ள Northwick Park hospital என்னும் மருத்துவமனை, அதன் தீவிர சிகிச்சைப்பிரிவின் படுக்கைகள் நிரம்பியதையடுத்து, நேற்று முன்தினம் அவசர நிலையை அறிவித்தது.

அவசர அவசரமாக நோயாளிகளை பிற மருத்துவமனைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நர்ஸ்கள் நிலைமைதான் படு மோசம்.

அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் மாஸ்குகள் கவுன்கள் ஆகியவற்றின் பற்றாக்குறை நிலவுகிறது. அந்த மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஆறு நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமான கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சரியான பாதுகாப்பு உடைகள் இல்லாமல் மாடாய் உழைப்பது ஒருபக்கம் இருக்க, ஒரு நர்ஸ், உனக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால், தயவு செய்து நீ வீட்டுக்கே வரவேண்டாம் என்று என் வீட்டில் சொல்லிவிட்டார்கள் என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...