லண்டனில் கொரோனா தாக்கியதோடு 6 நாட்கள் கோமாவில் இருந்த நபர் முழுதாக குணமடைந்தார்! மக்களுக்கு அவரின் செய்தி

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6 நாட்கள் கோமாவில் இருந்த நிலையில் நோய் பாதிப்பில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளதோடு, பலருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

Andrew Hodge (54) என்ற நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு ஆறு நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களால் செயற்கையான கோமாவில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு கடந்த 27ஆம் திகதி மருத்துவமனையில் இருந்து Hodge டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்தவாறு உடல்நலம் தேறி வருகிறார்.

Hodge கூறுகையில், கொரோனாவில் இருந்து நிச்சயம் மீள முடியும், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என அர்த்தமில்லை.

மக்கள் கொரோனாவால் இறப்பதை பற்றியே அதிகமாக பேசுகிறார்கள், பலர் நோயில் இருந்து குணமடைவதை பற்றி பேசுவோம்.

என்னை மருத்துவமனையில் மிகவும் நன்றாக கவனித்து கொண்டார்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறி கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்