பிரித்தானியா ராணியார் தன்னுடைய உரையில் அப்படி பேசவேயில்லை! இதோ அதன் உண்மை

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா ராணியார் கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்த உரையின் போது பிலிப்பைன்ஸைப் பற்றி கூறியதாக தகவல் ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிக முறை பகிரப்பட்டு வரும் நிலையில், அது உண்மையில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து நாட்டு மக்களிடம் பிரித்தானிய ராணியர் பேசும் உரை கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பப்பட்டது. ராணியாரின் இந்த உரையை பிரித்தானிய மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

அதே போன்று அதில், ராணியர் விரைவில் நாம் இதில் இருந்து மீள்வோம், என்.ஹெச். ஊழியர்களுக்கு நன்றி போன்ற பல விஷயங்களை பேசினார்.

இந்நிலையில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில், ராணியார் கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து பேசிய போது, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Rodrigo Duterte கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் குறித்து பாராட்டியதாக புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், அதில், Rodrigo Duterte, சிறந்த தலைவர், இவரை தலைவராக பெறுவதற்கு பிலிப்பைன்ஸ் மக்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

அவர் உண்மையிலேயே தனது நாட்டை நேசிக்கிறார். பிலிப்பைன்ஸில் மோசமான அரசாங்கம் இல்லை. இது உண்மையில் மோசமான குடிமக்களைக் கொண்டுள்ளது என்று பேசியதாக குறிப்பிட்டிருந்தது.

இதனால் இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் நடத்திய உண்மை அலசலில் ராணி அப்படி பேசவியில்லை, எனவும் அதை போட்டோஷாப்பால் மாற்றியுள்ளனர் என்பதை கண்டுபிடித்து, இரண்டிலும் ராணி பேசியதை எப்படி மாற்றியுள்ளனர் என்பதை குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்