13 வயது சிறுவனின் குழந்தைக்கு தாயான திருமணமான பெண்: 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

திருமணமான பெண் ஒருவர் 13 வயது சிறுவன் ஒருவனுடன் உறவு கொண்டு அவனது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் Berkshireஐச் சேர்ந்த Leah Cordice (20), 13 வயது சிறுவன் ஒருவனை ஏமாற்றி அவனது குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

பின்னர் தன்னை அந்த சிறுவன் வன்கொடுமை செய்ததாக கூறிவிட்டார் Cordice. ஆனால், அந்த சிறுவனுடனான சந்திப்பு ஒரு முறையல்ல கிட்டத்தட்ட ஐந்து முறை தொடர்ந்துள்ளது.

அத்துடன், தன்னை சந்தோஷமாக வைத்துக்கொண்டதற்காக அந்த சிறுவனுக்கு மீனும் சிப்ஸும் வாங்க பணமும் கொடுத்துள்ளார் Cordice.

இதற்கிடையில், தனது குழந்தையை பிரிந்ததால், தான் மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளான் அந்த சிறுவன்.

மறுபக்கம், Cordiceஇன் கணவர் Daniel அந்த குழந்தை தன் குழந்தை என எண்ணி அதை அன்புடன் வளர்த்து வந்துள்ளார்.

அவரும் தன் மனைவி தனக்கு துரோகம் இழைத்துவிட்டது தெரியவர, ஏமாற்றமடைந்து மனைவியைப் பிரிந்துவிட்டார்.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, Cordiceக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்