பிரித்தானியா அரசின் உத்தரவில் இவ்வளவு ஆபத்து இருக்கிறதா? இந்திய தம்பதி எடுத்த அதிரடி முடிவு!

Report Print Santhan in பிரித்தானியா

சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும், மீண்டும் பயன்படுத்துமாறு தெரிவித்த, பிரித்தானிய அரசின் உத்தரவுக்கு எதிராக இந்திய மருத்துவ தம்திய வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. தற்போது வரை மட்டும் நாட்டில் 254,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 36,393 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதற்காக, இந்திய மருத்துவர்கள் பலரும் முன்நின்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அங்கு சிக்கன நடவடிக்கையாக, பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துமாறு அந்த நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது ஆபத்தான உத்தரவு ஆகும். ஏனெனில், மீண்டும் மீண்டும் பயன்படுத்திய சுய பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துகிறபோது அதனுள் கொரோனா வைரஸ் ஊடுருவி மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

ஏற்கனவே பிரித்தானியாவில் 100-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் இறந்து விட்டனர்.

இதனால் இதற்கு மேலும் சுகாதார பணியாளர்கள் யாரும் இறந்துவிடக்கூடாது, இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணி, இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷாந்த் ஜோஷி, மினால் விஸ் தம்பதி, கடந்த மாதமே பிரித்தானிய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இதில், மினால் விஸ் இப்போது கர்ப்பமாக இருக்கிறார். அந்த கடிதத்தில் சில கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு சுகாதாரத்துறையின் பதில்களை கோரினர்.

ஆனால் அதற்கு அவர்களுக்கு கிடைத்துள்ள பதில் திருப்திகரமாக இல்லை. இதையடுத்து அவர்கள் லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

சுய பாதுகாப்பு கவசங்களின் தேவையை குறைக்கவும், அவற்றை மீண்டும் பயன்படுத்தவும் வழிநடத்துகிற அரசின் வழிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் இந்த தம்பதியர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்