லண்டனில் இளம் மனைவி மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு கொரோனாவுக்கு பலியான பேருந்து ஓட்டுனர்! அவரின் இறுதி காட்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த பேருந்து ஓட்டுனரின் சடலம் காரில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பலரும் சுற்றி நின்று மரியாதை செலுத்தினார்கள்.

லண்டன் பேருந்து ஓட்டுனராக இருந்த Emeka Nyack Ihenacho என்பவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மாதம் உயிரிழந்தார்.

Emekaவுக்கு Tamara Carrick என்ற மனைவியும், Makiah என்ற மகனும் உள்ளனர், Emekaக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்காதது தான் அவர் உயிரிழப்புக்கு காரணம் என குடும்பத்தார் முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

கொரோனாவால் கணிசமான எண்ணிக்கையில் லண்டனில் போக்குவரத்து ஊழியர்கள் இறந்துள்ள நிலையில் பணத்தேவையால் தான் ஆபத்தையும் மீறி Emeka கொரோனா சமயத்தில் பணிக்கு சென்றிருக்கிறார்.

இந்த சூழலில் ஆஸ்துமா பிரச்சனை மற்றும் கொரோனா வைரஸ் Emeka-வை தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் Emeka-ன் சடலம் நேற்று லண்டனின் Islingtonல் உள்ள Pemberton Gardens வழியாக காரில் கொண்டு செல்லப்பட்டது.

அப்போது வழியில் நின்றிருந்த மக்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர், பின்னர் Emeka-ன் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

வீடியோவை காண

Emeka-ன் மனைவி மற்றும் மகன்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்