லண்டனில் மோசமான காயங்களுடன் மீட்கப்பட்ட 4 வயது குழந்தை உயிரிழப்பு! உயிருக்கு போராடி வரும் 35 வயது பெண்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் வீட்டில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 4 வயது குழந்தை மோசமான காயங்களுடன் உயிருக்கு போராடி நிலையில், அந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Mitcham-ல் உள்ள Monarch Parade-ல் நேற்று உள்ளூர் நேரப்படி சரியாக 4 மணிக்கு இரண்டு பேர் காயங்களுடன் கிடப்பதாக மெட்ரோ பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அங்கிருக்கு குடியிருப்பில் நான்கு வயது பெண் குழந்தை மற்றும் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் என இரண்டு பேர் மோசமான காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளனர்.

Monarch Parade-GOOGLE

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சைப் பெற்று வந்த 4 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதில் அந்த 35 வயது பெண் உயிர் பிழைக்க போராடி வருகிறது.

பொலிசார் குழந்தையின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் தேடவில்லை, யாரையும் கைது செய்யவில்லை.

குழந்தையின் மரணம் மற்றும் பெண்ணின் காயங்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்