பிரித்தானிய மகாராணி வசித்து வந்த மாளிகையை 44 கோடிக்கு வாங்கிய அரசு! அருங்காட்சியகமாக மாறுகிறது

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா மகாராணி எலிசபெத் மால்டா தீவில் சுமார் 3 ஆண்டுகள் வசித்து வந்த மாளிகையை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானிய மகாராணி எலிசபெத், 1949-ஆம் ஆண்டு முதல், 1951-ஆம் ஆண்டு வரை மத்திய தரைக்கடலில் உள்ள மால்டா தீவில் உள்ள மாளிகையில் வசித்தார்.

திருமணமான புதிதில், தன் கணவர் பிலிப்புடன் அவர் வாழ்ந்த இந்த மாளிகை, அவர் சென்றபின் பராமரிப்பின்றி இருந்தது.

இந்த மாளிகையை சுமார் 44 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ள மால்டா அரசு, அதனை 88 கோடி ரூபாய் செலவில் புணரமைக்க உள்ளது.

புணரமைக்கப்பட்ட பின், இந்த மாளிகையை அருங்காட்சியகமாக மாற்ற மால்டா அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில், இந்த முடிவை மால்டா அரசு எடுத்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்