கணவர் கொல்லப்பட்ட விவகாரம்... வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பிரித்தானிய பெண்மணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

மலேசிய நாட்டில் மது போதையில் இருந்த கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்ததாக கூறி பிரித்தானிய பெண் ஒருவர் மரண தண்டனையை எதிர்நோக்குகிறார்.

மலேசியாவின் லங்காவி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் வைத்து 63 வயதான ஜான் வில்லியம் என்பவர் கத்தியால் தாக்கி கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் அவரது மனைவி 54 வயதான சமந்தா ஜான்ஸ் தற்போது விசாரணை கைதியாக சிறையில் உள்ளார்.

இந்த வழக்கில் சமந்தா திட்டமிட்டே தமது கணவர் ஜானை கொலை செய்துள்ளார் என்பது நீதிமன்றத்தில் நிரூபணமானால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் மலேசிய நீதிமன்றம் சமந்தா மீதான குற்றச்சாட்டுகளை இன்னொரு கோணத்தில் விசாரிக்கவும், அதன்வாயிலாக அவருக்கு 10 முதல் 30 ஆண்டுகள் சிறை தண்டனைக்கான வாய்ப்புகள் அளிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று, 2018 அக்டோபர் மாதம் வழக்கம் போல மது போதையில் குடியிருப்புக்கு திரும்பிய ஜான், சமந்தாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜான் கத்தியால் தாக்கப்பட்டு, ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அவரது மனைவி சமந்தா அருகாமையில் குடியிருக்கும் பிரித்தானிய நண்பர்களின் உதவியை நாடியுள்ளார்.

ஆனால் அதனிடையே ஆம்புலன்ஸ் வந்து சேரவும், ஜான் வில்லியம் மரணமடைந்ததும் தெரியவந்தது.

அதுமுதல் சமந்தா விசாரணை கைதியாக சிறையில் உள்ளார். பிரித்தானியாவின் சோமர்செட் பகுதியை சேர்ந்த சமந்தா, இத்தனை ஆண்டு காலம் ஜானுடனான வாழ்க்கை நரகத்துக்கு ஒப்பானது என கூறியுள்ளார்.

சமந்தா சார்பில் இந்த வழக்கில் வாதிடும் சட்டத்தரணி சங்கீத் கவுர் தேவ், தமது கட்சிக்காரர் அவரது கணவரை இதுநாள் வரை நேசித்து வந்தது உண்மை.

அவருக்கு அதிகமான பிரச்சனைகள் இருந்தது. இருப்பினும் தமது கணவர் சார்பில் இதுவரை ஆதரவாக இருந்துள்ளார்.

இதுபோன்ற எதுவும் நடக்கும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை. அவர் தற்போது தமது கணவனையும் வீட்டையும் இழந்துவிட்டார். இது அவருக்கு உண்மையில் ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் என சட்டத்தரணி சங்கீத் கவுர் தெரிவித்துள்ளார்.

கலை நிக்ழச்சி ஒன்றில் சமந்தாவை முதன் முறையாக சந்தித்த ஜான் வில்லியம், அந்த பழக்கம் நட்பாக மாற பின்னர் இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுத்துள்ளனர்.

தொடர்ந்து தமது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு சமந்தாவுடன் மலேசியாவுக்கு குடிபெயர்ந்தார் ஜான் வில்லியம்.

ஆனால் ஒன்றாக வாழத்தொடங்கிய சில மாதங்களிலேயே ஜான் வில்லியத்தின் உண்மை குணம் சமந்தாவுக்கு புரியவந்தது.

மது போதையில் குடியிருப்புக்கு திரும்பும் ஜான் நாள்தோறும் சமந்தாவை தாக்கியுள்ளார்.

ஆனால், மலேசிய விதிகளுக்கு பயந்து இதுவரை சமந்தா பொலிசாரின் உதவியை நாடவில்லை என்கிறார் சங்கீத் கவுர். மட்டுமின்றி ஜான் கொல்லப்படும் வரை சமந்தா அந்த மொத்த துன்பத்தையும் பொறுத்துக்கொண்டார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டுமின்றி இவர்களது குடும்ப பிரச்சனையில், சீக்கிரம் ஒருநாள் சமந்தாவுக்கு ஜானால் ஆபத்து நேரிடலாம் என பயந்ததாக அண்டை வீட்டார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்