கொரோனா தொற்று அதிகரித்துவருவதையடுத்து பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரத்தை முடக்குவது தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை இந்த விடயம் தொடர்பாக கவுன்சில் தலைவர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறை பிரதிநிதிகளுடன் கூட்டம் ஒன்றில் பங்கேற்றதாக சுகாதாரத்துறை செயலர் Matt Hancock தெரிவித்துள்ளார்.
15 நாட்களில் பர்மிங்காமில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாகவும், 100,000 பேருக்கு 25 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஏற்கனவே பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நகரத்தை மீண்டும் முடக்குவதைத் தவிர்ப்பதற்காக கவுன்சில் தலைவர்கள் போராடி வருகிறார்கள்.