வேலைக்கான உரிமை பறிப்பு... சாப்பாட்டுக்கே வழியில்லை: இங்கிலாந்தில் சடலமாக மீட்கப்பட்ட தாயார்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
679Shares

ஸ்கொட்லாந்தில் கடுமையான வறுமையால் தத்தளித்துவந்த இளம் தாயார் ஒருவர் தமது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தையின் அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உகாண்டாவைச் சேர்ந்த மெர்சி பாகுமா என்பவரே ஆகஸ்ட் 22 சனிக்கிழமை சடலமாக பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை முதல் அவர் தொடர்பான எந்த தகவலும் இல்லை என்ற நிலையில், அவரது நண்பர்கள் கிளாஸ்கோ நகர பொலிசாரின் உதவியை நாடியதாலையே இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மீட்கப்பட்ட ஆண் குழந்தை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, நேற்று அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புகலிடக்கோரிக்கையாளரான மெர்சி, அவருக்கு வழங்கப்பட்டிருந்த வேலை செய்வதற்கான உரிமை பறிக்கப்பட்டதன் பின்னர், நண்பர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களையே உணவுக்காக சார்ந்திருந்துள்ளார்.

அவரது புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில், அவர் நாட்டைவிட்டு வெளியேறும் நாள் காலாவதியானது என அதிகாரிகளால் அவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 11 ஆம் திகதி தொண்டு நிறுவனம் ஒன்றை தொடர்பு கொண்ட மெர்சி, தமது நிலையை அவர்களிடம் கூறி உதவி கோரியுள்ளார்.

தற்போது மெர்சி மரணமடைந்த தகவல் அறிந்த அந்த தொண்டு நிறுவனம், இளம் தாயாரும் பிள்ளைகளும் பட்டினியால் சாகும் அளவுக்கு இந்த நகரம் கொடூர மனம் படைத்ததா என கேள்வி எழுப்பியுள்ளது.

நாளை மெர்சியின் மகன் வளர்ந்து நம்மிடம் இந்த கேள்விகளை கேட்கலாம் எனவும் அந்த தொண்டு நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்