பல்டியடித்த பிரித்தானியா அரசாங்கம்.. இனி இது கட்டாயம்! வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா
892Shares

பள்ளிகளில் முகக்கவச கட்டுப்பாடு தொடர்பான தனது வழிகாட்டுதலை பிரித்தானியா அரசாங்கம் மாற்றியமைத்துள்ளது.

அதன்படி, பிரித்தானியாவில் உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் பால்கனி போன்ற சமூக இடைவெளி கடைப்பிடிக்க கடினமாக இருக்கும் பொது இடங்களில் மேல்நிலை மாணவர்கள் மற்றும் பணியாளர்களும் முகக்கவசங்களை அணிய வேண்டியிருக்கும்.

உலக சுகாதார அமைப்பின் புதுப்பிக்கப்பட்ட ஆலோசனையைப் பின்பற்றும் வகையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என்று கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் கூறினார்

ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் சமீபத்திய மருத்துவ மற்றும் அறிவியல் ஆலோசனைகளைக் கேட்டு செயல்பட்டு வருகிறோம் வில்லியம்சன் கூறினார்.

ஆனால் வகுப்பறையில் முகக் கவசம் அணிவது அவசியமில்லை.நாடு முழுவதும் பரவுதல் விகிதம் அதிகரித்தால் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வழிகாட்டுதல்கள் அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்