சக ரயில் பயணியின் சூட்கேசுடன் எஸ்கேப்பான பெண் கைது: சூட்கேசில் இருந்த பொருட்களின் மதிப்பு என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் சக பயணி ஒருவரின் சூட்கேசுடன் எஸ்கேப் ஆன பெண் ஒருவர் சிக்கினார். Hajar Al Fahad (26) என்ற பெண் Paddingtonஇலிருந்து Cardiff Central நோக்கி செல்லும் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

அப்போது அவருடன் பயணித்த Fatima Al Shatti என்ற பெண்ணிடம் நைசாக பேச்சுக்கொடுத்துள்ளார் Hajar.

தன்னை ஒரு பணக்காரப் பெண் போல காட்டிக்கொண்ட அவர், Fatimaவின் சூட்கேசை லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைப்பது போன்ற சிறு உதவிகள் செய்துள்ளார்.

Fatima அவரை நம்பி பேசிக்கொண்டே வந்த நிலையில், இறங்கும்போது தனது லக்கேஜுடன் சேர்த்து Fatimaவின் சூட்கேசையும் எடுத்துக்கொண்டு இறங்கிவிட்டார் Hajar.

ஆனால், Swansea என்ற இடத்துக்கு வரும் வரை அதை கவனிக்கவில்லை Fatima. இறங்கும்போது சூட்கேசைக் காணவில்லை என்றதும் பதறிய Fatima, பொலிசாருக்கு தகவலளிக்க, Hajarஇன் ரயில் டிக்கெட்டை வைத்து அவரை வளைத்துப் பிடித்துவிட்டார்கள் பொலிசார்.

அவரிடமிருந்த சூட்கேசை பறிமுதல் செய்து Fatimaவிடமே பொலிசார் கொடுத்துவிட்டார்கள். அந்த சூட்கேசில் 76,559 பவுண்டுகள் மதிப்புடைய கைக்கடிகாரங்கள், நகைகள் இருந்துள்ளன.

கைது செய்யப்பட்ட Hajar நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், தான் சிறைக்கு சென்றுவிட்டால், அவர்களை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார் அவர்.

எனவே, அவருக்கு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, அதை 12 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.

அந்த 12 மாதங்களில் Hajar ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டால், உடனே அவர் சிறைக்கு செல்லவேண்டியிருக்கும்.

அத்துடன், 20 நாட்கள் மன நல மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதோடு 150 மணி நேரம் ஊதியமின்றி பணியாற்றவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்