லண்டன் குடியிருப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட பார்சல்: இளைஞரை அதிரடியாக கைது செய்த பொலிஸ்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றின் முகவரிக்கு நாட்டு வெடிகுண்டு பார்சல் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரை பயங்கரவாத எதிர்ப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.

20 வயது கடந்த அந்த இளைஞரை சனிக்கிழமை கேம்பிரிட்ஜில் உள்ள அவரது வீடு புகுந்து பயங்கரவாத எதிர்ப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து தெற்கு லண்டனில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

குறித்த நபர் வெடிகுண்டு பார்சலை வடக்கு லண்டனில் அமைந்துள்ள ஒரு முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட குறித்த வெடிகுண்டானது, கண்டிப்பாக உயிரிழப்புகளை ஏற்படுத்த போதுமானது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு சுமார் 9.13 மணியளவில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இரு முகவரிகளில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், குறித்த விவகாரம் தொடர்பில் அதிகாரிகளுக்கு இந்த வார துவக்கத்தில் தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்