இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டை மீறி வருகிறது! எம்.பி சொன்ன தகவல்

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா
345Shares

இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டை மீறி வருவதாக அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கில்லியன் கீகன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் வடக்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று விகிதங்கள் தொடர்ந்து உயர்ந்ததையடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 609 கொரோனா வைரஸ் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 77 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன் திங்களன்று நாட்டை மூன்று அடுக்குகளாகப் பிரிக்கும் திட்டங்களை முறையாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அரசாங்கத்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவினர் (SAGE) வலியுறுத்தியதைத் தொடர்ந்து பிரதமரின் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மதுபான விடுதிகள், உணவகங்கள் மூடுவது கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை தடுக்க உதவாது என SAGE உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், போதிய நிவாரண தொகையை வழங்காமல் வணிக நிறுவனங்களை மூடுவது அது சார்ந்திருக்கும் நபர்களை பெரிதளவில் பாதிக்கும் என்றும், எனவே உரிய நிவாரண தொகை வழங்கப்படுவது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்றும் கீகன் தெரிவித்துள்ளார்.

தற்போது பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 5.64 லட்சத்தினை கடந்துள்ளது. இதுவரை 42,682 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்