பிரித்தானியாவில் பட்டப்பகலில் நடந்த துயரம்! உயிரிழந்த இளைஞரின் புகைப்படம் மற்றும் விவரம் வெளியானது

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பட்டப்பகலில் நடந்த தாக்குதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த இளைஞர் ஒரு இசைக்கலைஞர் எனவும் அவர் பெயர் குறித்து முழு தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Nottingham-ல் Victoria மையத்தின் அருகே நேற்று பகல் நடந்த தாக்குதலில் இளைஞன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

ஆனால், அந்த இளைஞன் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகமல் இருந்தது.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞன் ஒரு இசைக்கலைஞர் எனவும் 20 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் பெயர் Keany Kristal Kissingou-Mabiala என்பதும் தெரியவந்தது.

(Image: Nottinghamshire Police WS)

Nottingham-ல் இருக்கும் இசைக் கச்சேரிகளில் இவர் ஒரு முக்கிய நபராக இருந்து வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 17 மற்றும் 19 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார் கைது செய்து, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும், அதிகரி ஸ்டீவ் ராக் கூறுகையில், இது ஒரு சோகமான சம்பவம், இந்த மோசமான விளைவின் காரணமாக இளைஞன் உயிரிழந்துள்ளான்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக நாங்கள் வேறு யாரையும் தேடவில்லை, இந்த தாக்குதலின் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவிய பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் தகவல்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

(Image: Matt Jarram/Nottingham Post)

Keany Kristal Kissingou-Mabiala உள்ளூர் இசைக் கச்சேரிகளில் ஒரு முக்கிய நபராக இருந்தார் என்பதை நாங்கள் அறிவோம். இதனால் அவரது மரணம் குறித்து மக்கள் நம்பமுடியாத அளவிற்கு வருத்தப்படுகிறார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.

இது போன்ற கடினமான சூழ்நிலையில், உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் தனியுரிமை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்