பிரித்தானியர்கள் இனி இந்த நாட்டிற்குள் நுழைய தடை: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களில் இருக்கும் மக்கள் வேல்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள தடை விதிப்பதாக அந்நாட்டு முதலமைச்சர் Mark Drakeford's அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய 4 நாடுகளை இணைந்து உள்ளடக்கியது தான் பிரத்தானியா.

முன்னதாக, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பிரித்தானியாவின் மற்ற நாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இங்கிலாந்து அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என வேல்ஸ் முதலமைச்சர் Mark Drakeford's பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் போரிஸ் ஜோன்சனிடமிருந்த எந்த பதிலும் கிடைக்காத நிலையில், Mark Drakeford's அதிகாரங்களை பயன்படுத்தி, பிரித்தானியாவின் ஹாட்ஸ்பாட்களில் இருந்து வரும் மக்களுக்கு வேல்ஸின் எல்லைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

இந்த தடை வடக்கு அயர்லாந்து, இங்கிலாந்தில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் ஸ்காட்லாந்தின் மத்திய பகுதி என அனைத்திற்கும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்