பிரித்தானிய ராணியாரின் மெய்க்காப்பாளரின் மோசமான செயல்: வெளியான முழுத்தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய ராணியாரின் முன்னாள் மெய்க்காப்பாளரில் ஒருவர் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நிலையில், அவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் ராணுவ வீரரான 27 வயது ஆலிவர் கூப்பர் என்பவரே சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி, தற்போது சிறைத்தண்டனைக்கு உள்ளானவர்.

ஆலிவர் கூப்பர் மீது மொத்தம் 16 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு, அவருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில், இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சசெக்ஸ் பல்கலைக்கழக சட்ட மாணவரான ஆலிவர் கூப்பருக்கு, வியாழக்கிழமை லூயிஸ் கிரவுன் நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆலிவர் கூப்பர் சாரணர் தலைவராக செயல்பட்ட காலத்தில் தம்மை பாலியல் ரீதியாக தொட்டதாக கூறி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமி ஒருவர் துணிச்சலுடன் வெளியிட்ட தகவலின் அடிப்படையிலேயே, அவர் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கையின் பின்னர், அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஆலிவர் கூப்பரின் மொபைல்போன் மற்றும் மடிக்கணினியில் ஏராளமான சிறார் துஸ்பிரயோக காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சிக்கின.

இந்த வழக்கு தொடர்பில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இன்னொரு சிறுமியும் முன்வந்து கூப்பருக்கு எதிராக சாட்சியம் கூறியுள்ளது.

தற்போது 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள கூப்பரின் பெயர், பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் ஆயுள் முழுக்க பதிவாகியிருக்கும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்