நிலைமை மோசமடைகிறது! பிரித்தானியா முழுவதும் 4 அடுக்கு கட்டுப்பாடு அமுல்படுத்த வேண்டும்: SAGE நிபுணர்கள் குழு கடும் எச்சரிக்கை

Report Print Basu in பிரித்தானியா
645Shares

பிரித்தானியா முழுவதும் புதுவகை கொரோனா அதிகரிப்பதால், பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்க்க நாட்டில் முழு ஊரடங்கு அமுல்படுத்த வேண்டும் என SAGE நிபுணர்கள் குழு அழைப்பு விடுத்துள்ளது.

பிரித்தானியாவில் நிலைமை தொடர்ந்து மோசமடையப் போகின்றன என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி செயல்பாட்டு ஆராய்ச்சி பேராசிரியரும், சுயாதீன SAGE குழு உறுப்பினருமான Christina Pagel எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுவகை கொரோனா தீவிரமானது, சில வாரங்களில் NHS-க்கு ஏற்படவுள்ள நெருக்கடியை தவிர்க்க இப்போது நடவடிக்கை தேவை.

பிரித்தானியாவில் குறிப்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நிலைமை வேகமாக மோசமடைந்து வருகிறது.

புதுவகை கொரோனா முந்தைய வைரஸை விட தீவிரமாக பரவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் தற்போது வலுவாக உள்ளன.

புதுவகை கொரோனா அரிதாக இருந்தாலும் கூட, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள் அனைத்து பகுதிகளிலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

டிசம்பர் 23 அன்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் அறிவித்தபடி, 1-3 அடுக்கு கட்டுப்பாடுகள் புதுவகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என்று சுயாதீன SAGE குழு குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்தின் அனைத்து பகுதிகளிலும் 4 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். மேலும், பிரித்தானியாவில் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்றும் சுயாதீன SAGE குழு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்