பிரித்தானியாவில் இறுகும் நிலைமை... மருத்துவர்கள் அந்த கடினமான முடிவை எடுக்க வாய்ப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா
1451Shares

கொரோனா நோயாளிகளால் அச்சுறுத்தும் வகையில் NHS மருத்துவமனைகள் நிரம்பி வரும் நிலையில், யாருக்கு சிகிச்சை யார் இறக்க வேண்டும் என்ற மிகக் கடினமான முடிவை மருத்துவர்கள் முன்னெடுக்கும் சூழல் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மிக ஆபத்தான வகையில், தற்போது கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது.

செவ்வாயன்று வெளியான தகவலின் அடிப்படையில் மேலும் 51,135 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 414 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

லண்டன் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு முழுவதும் நோயாளிகளால் நிரம்பியுள்ள நிலையில்,

தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைத்துச் செல்ல யார்க்ஷயரில் உள்ள முக்கிய மருத்துவமனை நிர்வாகிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லண்டனில் அமைந்துள்ள ராயல் லண்டன் மருத்துவமனை மற்றும் ரோம்ஃபோர்டில் உள்ள குயின்ஸ் மருத்துவமனை, பர்மிங்காமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனை ஆகியவற்றுக்கு வெளியே ஆம்புலன்ஸ்கள் செவ்வாயன்று வரிசையில் காணப்பட்டன.

இதனிடையே, சூழல் மிகவும் கடினமாக மாறி வருவதாகவும், மருத்துவர்கள் ஆபத்தான அந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவார்கள் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஏற்ப, NHS-ல் படுக்கை வசதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறும் மருத்துவர்கள், சில பகுதிகளில் இன்னும் சில நாட்களில் மருத்துவமனைகளே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா நோயாளிகளை தவிர்த்து, மிக ஆபத்தான கட்டத்தில் இருக்கும் பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாத கடினமான சூழல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் பலர் அவதிக்கு உள்ளாகும் மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்