பதின்ம வயதில் ஆசை காட்டி கவர்தலும் கொடூர கொலையும்... பிரித்தானியாவில் நினைத்துப்பார்க்கமுடியாத ஒரு சம்பவம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
429Shares

பிரித்தானியாவில், வயது வந்தவர்களைப்போல, திட்டமிட்டு ஆசை காட்டி பதின்ம வயது சிறுவன் ஒருவனை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பிரித்தானியாவின் Reading என்ற இடத்திலுள்ள கோல்ப் விளையாட்டு மைதானம் ஒன்றில், Olly Stephens என்ற 13 வயது சிறுவன் ஒருவனை சிலர் கத்தியால் குத்தியதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

பொலிசார் செல்வதற்கு முன்பே, அப்பகுதியிலிருந்தவர்கள் Stephensக்கு முதலுதவி செய்து அவனை காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள். என்றாலும் அவனை காப்பாற்ற இயலாமல் போயிருக்கிறது.

விசாரணையில், Stephensஐ கத்தியால் குத்தியவர்களும், அவனைப்போலவே 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என்ற அதிரவைக்கும் தகவல் வெளியானது.

Stephensஐ ஆசை காட்டி வரவழைத்து, அவனை கொன்றிருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் மற்றும் நான்கு சிறுவர்களை பொலிசார் கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்துள்ளார்கள்.

சமூக ஊடகங்களும், சமூகத்துடன் இணைந்து வாழ இயலாமையும் இன்றைய இளைய சமுதாயத்தை எந்த அளவுக்கு வன்முறையாளர்களாக்கியிருக்கிறது என்பதையே காட்டுகிறது இந்த சம்பவம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

பதின்ம வயதினரும் வயது வந்தவர்களைப் போலவே ஆசை காட்டி கவர்ந்து கொலை செய்யுமளவுக்கு செல்ல என்ன காரணம்? இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்