பிரித்தானியாவில் இவ்வளவு பேர்களுக்கு பாதிப்பா? பிரதமர் ஜோன்சன் வெளியிட்ட பகீர் தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
700Shares

பிரித்தானியாவில் ஒரு மில்லியன் மக்களுக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ஜோன்சன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 70 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் ஜோன்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய உருமாறிய வீரியம் மிக்க கொரோனா பரவல் காரணமாகவே, வேறு வழியின்றி தேசிய அளவில் இந்த ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஆனால் கட்டுப்பாடுகளை விடாமுயற்சியுடன் எதிர்கொள்வதன் மூலம் பிப்ரவரி நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசிகளை மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு அளிக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

இருப்பினும், இதுவரை 1.3 மில்லியன் பிரித்தானியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி 2 வரையான காலகட்டத்தில் இங்கிலாந்தில் 50-ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளதாக பிரதமர் ஜோன்சன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது மொத்த சனத்தொகையில் 2.06 விழுக்காடு மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் 23 வரை இங்கிலாந்தில் 70-ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மொத்த எண்ணிக்கை 800,900 என இருந்ததில் இருந்து தற்போது 50-ல் ஒருவருக்கு என்ற அதிரவைக்கும் நிலையை எட்டியுள்ளதாக ஜோன்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒட்டுமொத்த தேசத்திலும் இன்று மற்றொரு பெரிய தியாகத்தை மக்கள் செய்கிறார்கள் என குறிப்பிட்ட ஜோன்சன்,

மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிலிருந்து பணிபுரிகிறார்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணையம் மூலம் கற்றலைச் சமாளிக்கின்றனர்.

தொடர்ச்சியான ஊரடங்கினால் ஏற்பட்ட சுமைகளை வணிக நிறுவனங்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டது என்றார்.

இந்த நிலையை எல்லோரும் பார்க்கும்போது, எங்களுக்கு வேறு வழியில்லை என்பதை மக்கள் பெரிதும் புரிந்துகொள்கிறார்கள் என்று நான் நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்