பிரெக்சிட்: துவங்கியது முதல் மீன் பிடி தகராறு... எல்லைக்குள் நுழைந்தவரை தடுத்து நிறுத்திய பிரித்தானிய கடற்படை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
344Shares

பிரெக்சிட்டுக்குப் பிந்தைய முதல் மீன் பிடி தகராறு துவங்கியது! பிரெக்சிட் ஒப்பந்தத்தில் முக்கிய இடம் பிடித்த பிரச்சினைகளில் மீன் பிடித்தல் உரிமையும் ஒன்று.

அதற்காக அதிகம் அடம்பிடித்தது பிரான்ஸ்தான்... ஆனால், சற்றும் எதிர்பார்க்காத ஒரு நாட்டுடன் மீன் பிடி தகராறு துவங்கியுள்ளது. ஆம், அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவரது மீன் பிடி படகை ஸ்காட்லாந்து ரோந்து படகு தடுத்து நிறுத்தியுள்ளது.

வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் Rockall என்ற ஒரு இடம் உள்ளது, அது தனக்கு சொந்தமானது என பிரித்தானியா கூறுகிறது. ஆனால், அதை அயர்லாந்து இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், அயர்லாந்தைச் சேர்ந்த Adrian McClenaghan என்பவர், அந்த பகுதியில் மீன் பிடிப்பதற்காக தனது மீன் பிடி படகில் சென்றுள்ளார்.

அப்போது, ஸ்காட்லாந்து கடற்படையின் ரோந்து படகு அவரது மீன் பிடிபடகை நிறுத்தியுள்ளது, கடற்படை வீரர்கள் அவரது படகில் ஏறியிருக்கிறார்கள்.

Rockallஐச் சுற்றி 12 மைல் தொலைவுக்கு மீன் பிடிக்கக்கூடாது என அவர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவிக்கிறார் Adrian.

ஐரோப்பிய ஒன்றிய படகு என்ற முறையில் தனக்கு அப்பகுதியில் மீன் பிடிக்க தற்காலிக மீன் பிடி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக கூறும் Adrian, இருந்தாலும் தான் மீன் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை என்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக அயர்லாந்து வெளிவிவகார அமைச்சகம், ஸ்காட்லாந்து மற்றும் பிரித்தானிய அதிகாரிகளை தொடர்புகொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்