பிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் புதிய உச்சம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
2628Shares

பிரித்தானியாவில் கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் சனிக்கிழமை வரை 3 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளானதாகவும், இறப்பு எண்ணிக்கை 80,000 கடந்துள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் உச்சம் பெற்ற நிலையை விடவும் தற்போது பல மடங்கு அதிக பாதிப்பு எனவும் இதில் 50 சதவீத கொரோனா நோயாளிகள் பரவலாக என்.எச்.எஸ் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரித்தானியாவில் 59,937 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மொத்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,017,409 என பதிவாகியுள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 28 நாட்களுக்குள் மரணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை, கடந்த 24 மனி நேரத்தில் 1,035 எனவும், இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 80,868 என அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி பிரித்தானியாவில் கடந்த நான்கு நாட்களில் தொடர்ச்சியாக கொரோனா மரண எண்ணிக்கை 1,000 கடந்துள்ளது.

இது இவ்வாறிருக்க, பிரித்தானியாவில் கொரோனா தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 95,000 என இருக்கலாம் என்ற புதிய தகவலும் வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில் மொத்தம் 32,294 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், 3,098 நோயாளிகள் அதி தீவிர சிகிச்சையில் செயற்கை சுவாசம் பெற்று வருகின்றனர்.

இருப்பினும் நம்பிக்கை அளிக்கும் வகையில், பிரித்தானியாவில் இதுவரை 1.5 மில்லியன் மக்கள் தங்கள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்