இரண்டு மாதங்கள் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்ய உள்ளதால் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
709Shares

இரண்டு மாதங்கள் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்ய உள்ளதால் பிரித்தானியர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை குறிப்பாக, லீட்ஸ், மான்செஸ்டர், ஷ்ஃபீல்டு மற்றும் வேக்ஃபீல்டு ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை காலை ஆறு மணி முதல் புதன்கிழமை நள்ளிரவு வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

Picture: PA

இங்கிலாந்தின் மீதமுள்ள பகுதிகளுக்கும் வேல்ஸுக்கும், புதன் மற்றும் வியாழக்கிழமைக்கு, மேலும் ஒரு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அபாயத்திற்குரிய இடங்களில் வசிக்கும் மக்கள், பெருவெள்ளத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

Picture: PA

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்