முக்கியமான ஆலோசனையை வலியுறுத்தியுள்ள பிரித்தானிய மருத்துவர்கள்! தடுப்பூசி திட்டத்தில் ஏற்படவுள்ள பெரிய மாற்றம்

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
173Shares

பிரித்தானிய மருத்துவர்கள் ஃபைசர் நிறுவனத்தின் இரண்டு டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடைவெளியை பாதியாக குறைப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

நாளுக்கு நாள் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகளையும் இறப்புகளை சந்தித்து வரும் பிரித்தானிய அரசு, அந்நாட்டில் இதுவரை 5.38 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை வழங்கியுள்ளது.

நட்டு மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி வழங்கப்படவேண்டும் என்பதற்காக, முதல் டோஸைப் பெற்ற மக்களுக்கு, அவர்களுக்கான 2வது டோஸை 12 வாரங்கள் (84 நாட்கள்) கழித்து வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால், முதல் டோஸ் போடப்பட்டதிலிருந்து 21 நாட்களுக்கு மேல் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டால் அவர்களின் தடுப்பூசி தொடர்ந்து பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கு ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று எச்சரித்துள்ளன.

அதேபோல், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களும் பிரித்தானிய தடுப்பூசி திட்டத்துக்கு ஏற்றதாக இல்லை என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் (BMA) பிரித்தானியாவின் தலைமை மருத்துவ அதிகாரிக்கு (CMO) ஒரு முக்கியமான கடிதத்தை எழுதியுள்ளனர்.

அதில், முதல் டோஸுக்குப் பிறகு 6 வாரங்களுக்குள் (42 நாட்கள்) இரண்டாவது டோஸ் கொடுப்பதை ஆதரிப்பதாக பிஎம்ஏ கூறியுள்ளது.

எனவே CMO, 12 வாரங்கள் எனும் இரண்டாவது டோஸின் தற்போதைய நிலையை, 6 வாரமாக மாற்ற அவசரமாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்