பிரித்தானியாவில் அடுத்த மாதம் மாணவர்கள் வகுப்புக்குத் திரும்பும்போது மேல்நிலைப் பள்ளிகளில் முகக் கவசம் மற்றும் அறிகுறியற்ற கொரோனா சோதனைகள் கட்டாயமில்லை என்று பள்ளி அமைச்சர் Nick Gibb உறுதிப்படுத்தியுள்ளார்.
முகக் கவசங்களுடன் கற்பிப்பது மிகவும் சவாலானது என்று Nick Gibb ஒப்புக் கொண்டார், ஆனால் முகக் கவசம் அணிய மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது என்றார்.
மார்ச் 8 முதல் வகுப்பறைகள் மீண்டும் திறக்கப்படும்போது, இடைநிலைப் பள்ளி வயது குழந்தைகள் வழக்கமான தானாக முன்வந்து விரைவான கொரோனா வைரஸ் சோதனைகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு அவர் பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
நிச்சயமாக இதை கட்டாயமாக்க முடியாது, ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாரத்திற்கு இரண்டு முறை சோதிக்க அனுமதிப்புவார்கள் என்று நம்புகிறோம்.
முதல் இரண்டு வார காலப்பகுதியில், மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மூன்று சோதனைகளை பள்ளியிலும் மற்றும் ஒரு சோதனை வீட்டிலும் நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
பின்னர் அவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை வீட்டிலேயே சோதனை செய்ய home-testing கருவிகள் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.