ஒபாமாவின் இரவு நேர உணவு என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in அமெரிக்கா
ஒபாமாவின் இரவு நேர உணவு என்ன தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இரவு நேரங்களில் தனது பிரத்யேக அலுவலகத்தில் பணிபுரியும்போது என்ன சாப்பிடுவார் என்பது வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ஒபாமா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஒவ்வொரு நாளும் இரவு சில மணி நேரங்கள் Treaty Room எனப்படும் பிரத்யேக அலுவலகத்தில் நேரத்தை செலவிடுவது உண்டு.

மொத்தமாக 5 மணி நேரங்கள் வரை இந்த அறையில் செலவிடும் ஒபாமா, இரவுப் பொழுதில் சிற்றுண்டியாக வெறும் ஏழே 7 பாதாம் பருப்புகளை மட்டுமே எடுத்துக்கொள்வாராம்.

இங்கு அவர் அந்த நாள் காலை முதல் நடைபெற்ற நிகழ்வுகளை குறித்து வைத்துக் கொள்வதும் அடுத்த நாளுக்கான தயாரிப்புகளையும் மேற்கொள்வார்.

மேலும் தாம் வழங்க வேண்டிய உரைகளை திருத்தங்கள் இருந்தால் அதையும் செய்து முடிப்பார். மட்டுமின்றி அமெரிக்க மக்கள் தினசரி ஜனாதிபதி பெயரில் அனுப்பி வைக்கும் கடிதங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 10 கடிதங்களையும் வாசித்து பதில் அனுப்ப பரிந்துரைப்பாராம்.

அதிகாலை 2 மணி வரை இந்த விசேட அறையில் அலுவல்களை முடிக்கும் அவர், வேலைப்பளு அதிகமில்லாதபோது இடையிடையே விளையாட்டு காட்சி ஊடகங்களையும் கண்டு களிப்பதுண்டாம்.

மட்டுமின்றி நெருங்கிய நண்பர்களுடன் வார்த்தை விளையாட்டிலும் ஈடுபடுவாராம். ஆனாலும் அவர் தினசரி இரவு அந்த 7 பாதாம் பருப்புகளை மட்டுமே எடுத்துக்கொள்வாராம். அதில் ஒரு எண்ணிக்கை கூட இந்த ஆறு ஆண்டுகளில் குறையவோ அதிகரிக்கவோ இல்லையாம்.

தினசரி 5 மணி நேரம் மட்டுமே தூங்கும் ஒபாமா, காலை 7 மணிக்கே அடுத்த நாள் பணிகளை துவங்கி விடுவாராம்.

வெள்ளை மாளிகையில் அமைந்திருக்கும் ஜனாதிபதிக்குரிய படுக்கை அறையின் கீழ் தளத்தில் இந்த விசேட Treaty Room அமைந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments