மாணவனின் மர்மக்கொலையில் ஒருவர் கைது: அதிரடி விசாரணைகள்!

Report Print Nivetha in அமெரிக்கா
மாணவனின் மர்மக்கொலையில் ஒருவர் கைது: அதிரடி விசாரணைகள்!

அமெரிக்க பல்கலைக்கழக மாணவன் ஒருவனின் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை ரோமில் வைத்து இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவன் காணாமல் போய் சில நாட்களுக்கு பின்னர் நேற்றைய தினம் டைபர் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பியூ சாலமன் என்ற 19 வயதுடைய மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட போது,

சாலமனின் நண்பர் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று காணாமல் போனதாகாவும், அவரை அதற்கு பின்னர் காணவே இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், பல்கலைகழகம் சாலமனை தேடுவதற்கு எச்சரிக்கை விடுத்த பின்னர் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, புளோரன்ஸ் பகுதியில் சாலமனின் சடலத்தை அமெரிக்க பெண் ஒருவர் இனங்கண்டுள்ளார்.

இதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக இன்று (05) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபப்பட்டுள்ளது.

ஆரம்பக் கட்ட விசாரணைகளின் போது இவருடைய மரணம் கொலையே என தெரியவந்துள்ளது.

மேலும், அந்த குற்றச் செயலுக்கான சாட்சியங்கள் குறித்தே செயற்பட்டு வருகின்றோம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதுடன், சாலமனின் கடன் அட்டை மற்றும் கையடக்க தொலைபேசியை வைத்து தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சாலமனின் கடன் அட்டையில் இருந்து 10000 டொலர்கள் அளவிலான பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரது சகோதரன் ஜேக் சாலமன் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments