டிரம்ப் தகுதி பற்றி ஒபாமா கருத்து

Report Print Maru Maru in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் ட்ரம்ப் பற்றி ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

அந்த சர்ச்சைகளை தீர்க்கும் டிரம்பின் முயற்சிகளும், அவருடைய தடாலடியான பேச்சால் மேலும், பல சர்ச்சைகளையும் தொடர்ந்த சிக்கலையுமே ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் அவர் பெண்கள் பற்றி கூறிய கருத்துகள் பெண்களுக்கு ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அவருடைய கடந்த கால செக்ஸ் லீலைகள் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அவர் ஒப்புமை இல்லாமலே பல பெண்களை பலாத்காரமாக சில்மிஷம் செய்துள்ளார். இதுவரை, அவரை ஒரு தொழிலதிபராக மட்டுமே பார்த்து வந்த பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொன்னால் தங்களுக்கும் உருவாகும் சிக்கலை நினைத்து மறைத்திருந்தனர்.

இப்போது ஒரு நாட்டை ஆளும் முதன்மை பொறுப்புக்கு அவர் போட்டியிடும் நிலையில் சமூக அக்கறையுடன் அவருடைய அந்தரங்கங்களை சம்பந்தப்பட்ட பெண்கள் வெளியிட்டுள்ளனர்.

இதில் உச்சகட்டமாக 13 வயது சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பிரச்சினை வழக்காகவும் மாறி, நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி டிரம்புக்கு உத்தரவும் போட்டிருக்கிறார்.

இத்தனை பிரச்சினைகளையும் கவனித்து வந்த ஜனாதிபதி ஒபாமா, டிரம்பின் கடந்த கால சர்ச்சைகளை பார்க்கும்போது, அவர் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு தகுதி இல்லாதவர் என கூறியுள்ளார்.

ஒபாமாவின் கருத்தை பெரும்பாலான மக்கள் நல்ல யோசனையாக நினைத்துவரும் நிலையில், இது டிரம்புக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்துவது நிச்சயமே.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments