பரிசுப் போட்டி: கேக் தொண்டையில் சிக்கி துடிதுடிக்க பலியான நபர்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் 80 விநாடிகளில் அதிக கேக் சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட நபர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Colorado மாகாணத்தை சேர்ந்தவர் Travis Malouff (42), இவர் அங்குள்ள ஒரு கேக் விற்பனையாகும் கடைக்கு சென்றார்.

அங்கு 80 நொடிகளில் கேக் சாப்பிடும் பரிசு போட்டி நடைபெற்றது.

இதில் Travis கலந்து கொண்டார், அந்த கேக்குகள் சாதா கேக்குகளை விட 6 மடங்கு பெரிதாக இருந்துள்ளது.

கேக்கை Travis சாப்பிட ஆரம்பித்தவுடனே அவர் தொண்டையில் அது சிக்கியுள்ளது.

அதில் திணறிய அவர் முகமும் நீல நிறமாக மாறியது, இதனால் மூச்சு விட முடியாமல் திணறிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments