மகளை திருமணம் செய்து 19 ஆண்டுகளாக கற்பழித்த தந்தை கைது

Report Print Peterson Peterson in அமெரிக்கா
3197Shares
3197Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் மகளை கடத்தி திருமணம் செய்து 19 ஆண்டுகளாக கற்பழித்து வந்த தந்தையை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் Oklahoma மாகாணத்தில் உள்ள Poteau நகரில் Henri Michele Piette(62) என்பவர் வசித்து வந்துள்ளார்.

இவர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு சிறுமிக்கு தாயான பெண்ணை மறுமணம் செய்து மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

தவறான பழக்கவழக்கம் உள்ள தாயார் ஒரு நிலையில் தனது மகளை கணவரிடம் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து தந்தையும் Rosalynn McGinnis என்ற பெயருடைய மகளும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

‘என் மனைவியான உனது தாயார் என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டார். இனிமேல் நீ தான் எனக்கு மனைவியாக இருக்க வேண்டும்’ என 11 வயதான அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 1997-ம் ஆண்டு பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்திக்கொண்டு தந்தை மெக்ஸிகோ நாட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர், மெக்ஸிகோவில் மகளான அச்சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார்.

திருமணம் ஆன நாள் முதல் ஒவ்வொரு நாள் என தொடர்ச்சியாக 19 ஆண்டுகள் மகளை கற்பழித்து வந்துள்ளார்.

இதன் மூலம் இருவருக்கும் 9 குழந்தைகள் பிறந்துள்ளது.

தந்தையின் அடிமைத்தனத்தால் கொடுமையின் உச்சத்திற்கு சென்ற மகள் தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கடந்தாண்டு தப்பியுள்ளார்.

மெக்ஸிகோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புகலிடம் பெற்று தனக்கு நேர்ந்த கொடுமைகளை புகாராக கூறியுள்ளார்.

மகளின் புகார்களை பெற்ற பொலிசார் கடந்த வியாழக்கிழமை தந்தையை கைது செய்து அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்