12 வயதிலிருந்து ஆபாச படங்களுக்கு அடிமை: இளம்பெண்ணின் எச்சரிக்கை கதை

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த பெண் தனது 12 வயதிலிருந்து ஆபாச திரைப்படங்களுக்கு அடிமையாகி பின்னர் அதிலிருந்து மீண்டதை புத்தகமாக எழுதியுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர் எரிகா கார்சா (35), இவர் சமீபத்தில் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக அதை வெளியிட்டுள்ளார்.

அதில், 12 வயதில் ஆபாச திரைப்படங்களை பார்க்க தொடங்கிய எரிகா வருடங்கள் செல்ல செல்ல அதற்கு அடிமையாகியுள்ளார்.

இதன் காரணமாக 17 வயதிலேயே தனது கன்னித்தன்மையை அவர் இழந்துள்ளார்.

வாரத்துக்கு நான்கு நாட்கள் வீட்டில் மது விருந்து வைக்கும் பழக்கம் கொண்ட எரிகா தனது வீட்டுக்கு ஆண்களை வரவழைத்து அவர்களோடு உறவு கொண்டுள்ளார்.

எரிகாவை திருத்த நினைத்த அவர் பெற்றோர் அவருக்கு 25 வயதாக இருக்கும் போது திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.

ஆனால் அவரின் இந்த ஆபாச பட பழக்கத்தை கேள்விப்பட்டு இரண்டு பேர் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறி நிராகரித்துள்ளனர்.

பின்னர் எரிகாவின் செயல் அவரையே அருவருப்பாக நினைக்க வைத்த நிலையில், ஆபாச திரைப்படங்கள் பார்ப்பதிலிருந்து தன்னை மீட்டெடுக்க நினைத்து பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது தான் தனது 32-வது வயதில் பாலி நாட்டில் வில்லோ நெல்சன் என்ற நபரை எரிகா சந்தித்துள்ளார்.

நெல்சனுடன் எரிகா நட்பான நிலையில், அவரின் பிரச்சனையை நெல்சன் புரிந்து கொண்டார்.

இதையடுத்து எரிகாவுக்கு மருத்துவர்கள் மூலம் சிகிச்சையளித்தும், மனதை ரிலாக்சாக வைத்து கொள்ள யோகாவும் கற்று கொடுத்து நெல்சன் உதவி செய்தார்.

பின்னர் மெல்ல ஆபாச திரைப்படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து எரிகா மீண்ட நிலையில் நெல்சனையே அவர் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது தம்பதிக்கு குழந்தை உள்ள நிலையில், நெல்சனின் உதவி மற்றும் அக்கறையால் புது பிறவி எடுத்தது போல எரிகா வாழ்ந்து வருகிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்