கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவர்: 50 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில், கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்ற சிறை ஊழியருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த சிறைக்கு, தனியார் நிறுவனத்தின் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

வாகனம் மூலம் கொண்டு வரப்படும் இந்த உணவில், ‘ஃபாஜிடாஸ்’ எனும் உணவு பொருள் பிரதானமாக இருக்கிறது. மெக்சிகோ மக்களின் பாரம்பரிய உணவான இது, மாட்டு இறைச்சி அல்லது கோழி இறைச்சியுடன் காய்கறிகளை சேர்த்து தயாரிக்கப்படும்.

இந்நிலையில், ஃபாஜிடாஸ் உணவு அதிகளவில் திருடப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், திருடப்பட்ட இந்த உணவானது வெளியில் சுமார் 12 மில்லியன் டொலர் அளவுக்கு விற்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது சிறையில் பணிபுரியும் கில்பெர்டோ எஸ்காமில்லா(53) என்ற ஊழியர் தான் இந்த திருட்டை செய்து வந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட கில்பெர்டோ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்