அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்திய மனிதனைச் சுட்டுக் கொன்றவருக்கு குவியும் பாராட்டுகள்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் Oklahomaவில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.

தனது மகளின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஹோட்டலுக்கு சென்ற ஒரு தாயும் இரண்டு சிறுமிகளும் அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டனர்.

துப்பாக்கியால் சுடப்பட்டவர்கள் Natalie என்னும் இரண்டு குழந்தைகளின் தாய், அவரது மகள் Niah(12) மற்றும் Alex(14) என்னும் இன்னொரு சிறுமி.

துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற அந்த நபரை அமெரிக்க குடிமகன் ஒருவர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

அதிக சேதத்தை ஏற்படுத்துவதற்குமுன் அவனை சுட்டுக் கொன்றதற்காக அந்த அமெரிக்கருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. சம்பவத்தில் காயம்பட்டவர்கள் மொத்தம் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இதற்கிடையில் சமூக ஊடகங்களில் ஒருவர் பொதுமக்களுக்கு துப்பாக்கி வைத்திருக்க அனுமதியளிப்பதால் எவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றன, பார்த்தீர்களா? துப்பாக்கி வைத்திருந்ததால்தான் அந்த நல்ல மனிதர் துப்பாக்கிச் சூடு நடத்தியவனைச் சுட்டு மேலும் யாருக்கும் சேதம் ஏற்படாமல் காப்பாற்ற முடிந்தது என்று செய்தி இட, இன்னொருவர் துப்பாக்கியே வைத்திருக்கக்கூடாது என்று சட்டம் இருந்தால் அந்த கெட்டவன் கையிலும் துப்பாக்கி இருந்திருக்காது, அவனை சுட அந்த நல்ல மனிதன் கையிலும் துப்பாக்கி வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று செய்தி இட்டிருந்தார்.

இது தீவிரவாதத் தாக்குதல் போல் தெரியவில்லை என்று தெரிவித்துள்ள பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...