வடகொரிய அணு ஆயுதங்களை அமெரிக்கா முன்னின்று அழிக்கும்!

Report Print Kabilan in அமெரிக்கா

வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்களை நிகழாண்டுக்குள் அமெரிக்கா அழிக்கும் என டொனால்டு டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை தொடர்ச்சியாக நடத்தி, உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால் அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் உருவானது.

அதன் பின்னர், இரு நாட்டு ஜனாதிபதிகளும் சந்தித்து அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் வடகொரியாவில் உள்ள் அணு ஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஒப்புதல் அளித்தார்.

ஆனால், வடகொரியா அணு ஆயுத ஆராய்ச்சிகளை கைவிடவில்லை என்று செய்தி வெளியானதால், அமெரிக்காவுக்கு சந்தேகம் உருவானது.

இந்நிலையில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்களை அமெரிக்கா அழிக்கும் என டொனால்டு டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை, இந்த ஆண்டுக்குள் அழிக்கும் பணியை அமெரிக்கா முன்னின்று செய்யும்.

அமெரிக்காவின் இந்த திட்டம் தொடர்பாக, வடகொரியாவிடம் விரைவில் அமெரிக்க தூதரக அதிகாரி மைக் பொம்பே ஆலோசனை நடத்துவார்.

இதன்மூலம் வடகொரியாவுக்கு எதிரான தடைகளை ரத்து செய்வது துரிதமாகும்’ என தெரிவித்துள்ளார்.

ANDREW HARRER/BLOOMBERG

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers