கர்ப்பிணி மனைவி, மகள்களை கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை: நன்றி கூறிய குற்றவாளி

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் கர்ப்பிணி மனைவி மற்றும் மகள்களை கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பினை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த Christopher Watts தன்னுடைய 15 வார கர்ப்பிணி மனைவி மற்றும் மகள்களை கொலை செய்துவிட்டு காணாமல் போய்விட்டதாக ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், 3 பேரின் உடல்களையும் Christopher வேலை செய்துவந்த இடத்தில் ஒரு எண்ணெய் தொட்டியில் இருந்து கண்டெடுத்தனர்.

அமெரிக்காவையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக Christopher கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தன்னுடைய கர்ப்பிணி மகளை, குழந்தைகளின் கண்முன்னே துடிதுடிக்க கொலை செய்த Christopher -க்கு மரண தண்டனை கொடுக்க வேண்டாம் என இறந்த கர்ப்பிணி ஷானானின் தாய் சான்ட்ரா நீதிமன்றத்தில் கூறினார்.

Christopher-க்கு மரண தண்டனை கொடுக்கப்படுவதால் இறந்த என்னுடைய 4 குழந்தைகளும் திரும்ப வரப்போவதில்லை என வேதனையுடன் கூறினார்.

இதனை தொடர்ந்து வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றவாளி Christopher-க்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதன் பின்னர் தனக்கு கிடைக்கவிருந்த மரண தண்டனை ரத்தானதற்காக, ஷானான் பெற்றோருக்கு தன்னுடைய நன்றியினை தெரிவித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்