குழந்தையை பார்த்துக் கொள்ள வந்த இளம்பெண்! குளிப்பதை பார்ப்பதற்காக வீட்டு உரிமையாளர் செய்த மோசமான செயல்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

நியூயார்க்கில் தன் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட இளம்பெண் உடை மாற்றுவதையும், நிர்வாணமாக குளிப்பதையும் பார்த்து ரசிப்பதற்காக அவரது குளியலறையில் ரகசிய கெமரா ஒன்றை மறைத்து வைத்த வீட்டு உரிமையாளர் மீது இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் அந்த இளம்பெண்.

Vanessa Rivas என்ற அந்த இளம்பெண், Lauren மற்றும் Matthew Seltzer வீட்டில் அவர்களது குழந்தைகளை கவனிக்கும் வேலையில் இணைந்தார்.

அவர்களது குழந்தைகளுக்கு நீச்சல் கற்று கொடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டபோது, நீச்சல் வகுப்புகளுக்குப் பின், அவர்களது குளியலறையை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்குமாறு கோரியுள்ளார் Vanessa.

ஒரு நாள் குளிக்கும்போது தற்செயலாக குளியலைறையில் கெமரா ஒன்று மறைத்து கைக்கப்பட்டிருந்ததைக் கண்ட Vanessa, அதை எடுத்து சோதித்தபோது, அதில் தான் உடைமாற்றும் காட்சிகளும், நிர்வாணமாக குளிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறார்.

உடனடியாக அந்த கெமராவின் மெமரி கார்டை அகற்றியதுடன், வேலையை விட்டும் நின்றிருக்கிறார் அவர்.

சம்பவத்தையடுத்து தொடர்ந்து Lauren, 45 முறைக்கு மேல் தொலைபேசியில் அழைத்ததாகவும், 26 குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் தெரிவிக்கும் Vanessa, அந்த மெமரி கார்டை தங்களிடம் கையளித்து விடுமாறு வற்புறுத்திக் கொண்டே இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

Vanessa மறுக்கவே, தான் வேலை செய்து வந்த அனைவரிடமும் தன்னைப் பற்றி வதந்திகள் பரப்பி, வேலையில்லாமல் செய்து விட்டதாக தெரிவிக்கிறார் அவர்.

தன்னிடமிருந்து மெமரி கார்டை Lauren தம்பதியர் பறித்துக் கொள்ளலாம் என்று அஞ்சிய Vanessa, அந்த மெமரி கார்டை உள்ளூர் பொலிசாரிடம் ஒப்படைத்தார்.

Lauren தம்பதியரின் மோசமான செயல்களால் கடும் மன உழைச்சலுக்கும், அவமானத்துக்கும் உள்ளானதால் Vanessa கடந்த வெள்ளியன்று Lauren தம்பதியர் மீது இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்