அமேசான் நிறுவன கழிவறையில் பிஞ்சுக்குழந்தையின் சடலம்: பிறந்து சில நிமிடங்களே ஆனதால் பரபரப்பு

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள அமேசான் நிறுவன கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பிஞ்சுக்குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரிசோனாவின் பீனிக்ஸ் நகரத்தில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவன அலுவலகத்தில் திடீரென பொலிஸார் குவிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொலிஸார் தரப்பில் கூறுகையில், பிறந்து சில மணிநேரங்களே ஆன பிஞ்சு குழந்தையின் சடலம், பெண்கள் கழிவறை பகுதியில் உள்ள குப்பைதொட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது சம்மந்தமாக தற்போது அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்